நாமக்கல் அரசு கலை கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்
நாமக்கல் அரசு கலை கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்
UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 08:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். எம்.பி., திருச்சி சிவா, மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்றிதழ் வழங்கி பேசுகையில், வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கிற போது, நம்முடைய அடுத்த அடி என்ன என்பதை மனதிற்குள் தெளிவாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.இத்தனை நாட்கள் நீங்கள் முடிவு செய்யவில்லை என்றால், இன்று இரவு உறங்கச் செல்லும்போது, நீங்கள் என்ன ஆக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு உறங்கச் செல்லுங்கள். அதை நோக்கியே நடை போடுங்கள் என்றார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

