அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிகள் விறுவிறு பொதுப்பணி துறை முதன்மை செயலர் தகவல்
அரசு மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிகள் விறுவிறு பொதுப்பணி துறை முதன்மை செயலர் தகவல்
UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 09:11 AM
ஊட்டி:
ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது; விரைவில் கல்லுாரி நிர்வாகத்திடும் ஒப்படைக்கப்படும் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டி அருகே கால்ப்கிளப் மற்றும் பட்பயரில், 40 ஏக்கரில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு, 447 கோடி ரூபாயில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.மருத்துவ கல்லுாரியில் உடல்கூறு பிரிவு, உடலியல் பிரிவு, நுாலக பிரிவு, நோயியல் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, மயக்கவியல், உயர்தொழில் நுட்ப பரிசோதனை மையம் கட்டப்பட்டு வருகிறது.ஊட்டியில் நிலவும் காலநிலை மாற்றத்தால் குறிப்பிட்ட நாளில் பணிகளை முடிக்க முடியாமல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.கட்டுமான பணிகளை முழுமையாக முடிக்க, 84 கோடி ரூபாய் கூடுதல் நிதி கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் அனைத்தும் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஊட்டியில் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் சந்திரமோகன் கூறுகையில் ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள்பொதுப்பணி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் அனைத்தும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் முடிக்கப்பட்டு கல்லுாரி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

