UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 09:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதி அரசுப் பள்ளிகளின் சுற்றுசுவர்களில், தேசத்தலைவர்கள் ஓவியம் வரையப்படுகிறது.உடுமலை நகரப்பகுதி அரசு பள்ளிகளில், பராமரிப்பு பணிகளில் ஒன்றாக, சுற்றுச்சுவர்களும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் சார்பிலும், தன்னார்வலர்களின் உதவியுடன் சுற்றுச்சுவர்களில் தேசத்தலைவர்கள் படங்கள் வரையப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு கருத்துகளை வலியுறுத்தியும் படங்கள் வரைப்படுகின்றன. புதிய கல்வியாண்டு துவங்க உள்ளதால், பள்ளிகளை பராமரிப்பதில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

