UPDATED : மார் 09, 2024 12:00 AM
ADDED : மார் 09, 2024 03:16 PM
ஆமதாபாத்:
உயரத்தைக் கராணம் காட்டி எம்.பி.பி.எஸ் படிக்க அனுமதிக்காத இந்திய மருத்துவ கவுன்சிலை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று படிப்பை முடித்து அரசு மருத்துமனையில் டாக்டர் ஆக கணேஷ் (வயது 23) பணியில் சேர்ந்தார்.குஜராத் மாநிலம் பாவ்நகரை சேர்ந்தவர் டாக்டர் கணேஷ் பாரய்யா (வயது 23). இவர் உலகிலேயே உயரம் குறைவான டாக்டர் என்ற சாதனை படைத்துள்ளார். 3 அடி உயரம் உடைய கணேஷ் டாக்டர் ஆக பல்வேறு தடைகளை உடைத்து சாதனை படைத்துள்ளார்.பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் மருத்து படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில் கணேஷ் டாக்டர் ஆக தகுதி இல்லை என அவரை நிராகரித்தது.பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் கணேஷ் திணறி போனார். அப்போது அவர் படித்த பள்ளி முதல்வரை சந்தித்து பேசி தீர்வு தெரிந்து கொண்டார். பிறகு குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தை கணேஷ் நாடினார். உயர் நீதிமன்றத்தில் கணேஷ் தொடுத்த வழக்கு தோல்வி அடைந்தது.இதையடுத்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு, கடந்த 2018ம் ஆண்டு கணேஷ் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது மருத்துவ படிப்பு படிக்க கணேஷிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. 2019ல் மருத்துவ படிப்பில் கணேஷ் சேர்ந்தார்.தற்போது குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர் ஆக கணேஷ் பணியில் சேர்ந்தார். இது குறித்து டாக்டர் கணேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மூன்று அடி உயரம் இருப்பதால் அவசர சிகிச்சைகளை பார்க்க முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில் தன்னை நிராகரித்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது டாக்டர் ஆகி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

