UPDATED : மார் 10, 2024 12:00 AM
ADDED : மார் 10, 2024 08:43 AM
ராமநாதபுரம்:
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டுள்ளதால் செய்முறைத் தேர்வு மதிப்பெண் 30 உடன் எளிதில் சென்டம் எடுக்கலாம் என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.சென்டம் எளிதாக எடுக்கலாம்
பி.ஹரிணி தேவி, ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: 15 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்டிருந்தனர். ஒரு வினா மட்டும் புத்தகத்திற்கு வெளியே கேட்டுள்ளனர். இரண்டு மதிப்பெண்கள் பிரிவில் 9ல் 6 வினாக்களில் கட்டாய வினா மட்டும் கடினமாக இருந்தது.மற்றபடி மூன்று, ஐந்து மதிப்பெண்கள் கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தன. நன்றாக படிப்பவர்கள் எளிதாக சென்டம் எடுக்கலாம். 70க்கு 50 மதிப்பெண்களுக்கு குறையாமல் அனைவரும் எடுக்க முடியும்.தோல்விக்கு வாய்ப்பில்லை
ஆர்.பத்மபிரியா, ஆசிரியர், செய்யது அம்மாள் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: செய்முறை தேர்வுக்கு 30 மதிப்பெண், எழுத்துத் தேர்வுக்கு 70 மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒரு மதிப்பெண் 15 வினாக்கள், இரண்டு மதிப்பெண் 6, மூன்று மதிப்பெண் பிரிவில் 6, ஐந்து மதிப்பெண்ணில் 5 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.இதில் இரண்டு மதிப்பெண் பிரிவில் எண் 24 கட்டாய வினாவாக கேட்கப்பட்டுள்ளது. இது புத்தகத்தின் உள்பகுதியிலிருந்து கேட்டுள்ளதால் பதிலளிக்க சிரமப்பட்டனர். பிற அனைத்து வினாக்களும் புத்தகத்தில் இருந்து வந்துள்ளதால் 70க்கு 70 பெறலாம். சுமாராக படிப்பவர்கள் கூட 30 மதிப்பெண் எளிதாக பெற முடியும். தோல்வி அடைய வாய்ப்பில்லை.90 மதிப்பெண் பெறுவது எளிது
எஸ்.லக்மிதா, ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி: தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அதிக மாணவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியும். 15 ஒரு மார்க் கேள்விகள், இரண்டு மற்றும் மூன்று மார்க் கேள்விகளும் எளிமையாகவே இருந்தன. 2 மார்க் வினாக்கள் மட்டுமே சற்று புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு வினாத்தாள்களை ஒப்பிடுகையில் அவற்றிலிருந்து அதிகம் கேட்கப்பட்டிருந்தன. கட்டாய வினாக்களில் புரோக்ராம் கண்டிப்பாக கேட்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த முறை அந்த கேள்வி இல்லை. இதனால் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு இல்லை.சென்டம் எடுப்பேன்
செ.விக்னேஷ், புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி, செங்குடி: வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்தது. இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண், கேள்விகள் மிகவும் எளிமை. மூன்று மதிப்பெண் கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. இருப்பினும் அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து விட்டேன். சராசரி மாணவர்கள் கூட 70க்கு 60 மதிப்பெண் பெறலாம். சென்டம் எடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.உறுதுணையாக கையேடுகள்
ஆர். முஹமது முபாசர், அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியபட்டினம்: எதிர்பார்த்தது போல் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தாலும் மூன்று மதிப்பெண் வினா சற்று கடினமாக இருந்தது.அடிக்கடி வகுப்புகளில் தேர்வாக எழுதியதால் எளிமையாகவும் இருந்தது. ஆசிரியர் ஆரம்பத்தில் சொன்ன விஷயங்களை மனதில் கொண்டு தவறுகளை திருத்தி மீண்டும் புரிந்து படித்ததால் எளிதாக இருந்தது. பள்ளியில் வழங்கிய கையேடுகள் உறுதுணையாக இருந்தன.