sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாழ்நாள் சாதனையாளர் விருது விழா

வாழ்நாள் சாதனையாளர் விருது விழா

வாழ்நாள் சாதனையாளர் விருது விழா


UPDATED : மார் 10, 2024 12:00 AM

ADDED : மார் 10, 2024 08:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2024 12:00 AM ADDED : மார் 10, 2024 08:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
வி.ஜி.பி., உலக தமிழ் சங்கத்தின் 31ம் ஆண்டு விழா, அச்சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமையில், நேற்று, சென்னையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின், ஆண்டு விழாவை வாழ்த்தி அனுப்பிய செய்தி வாசிக்கப்பட்டது.ஆண்டு விழா மலரை, இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான் வெளியிட, முதல் பிரதியை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், மல்லை தமிழ் சங்க தலைவர் மல்லை சத்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.சந்திரயான்- 3 புகழ் இஸ்ரோ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், நல்லி குப்புசாமி, இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான், சத்யபாமா பல்கலை வேந்தர் மரியஜுனா ஜான்சன் ஆகியோருக்கு, வி.ஜி.சந்தோசம் விருது வழங்கினார்.இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான் பேசுகையில், வி.ஜி.சந்தோசம், இலங்கையில் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். திருவள்ளுவர் மக்களுக்கு ஆற்றிய எழுத்தை உலகம் முழுதும் கொண்டு சேர்த்து, பல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றார்.இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள், சாய்ராம் கல்வி குழும தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து, வி.ஜி.பி., உலக தமிழ் சங்க துணைத் தலைவர் வி.ஜி.பி., ரவிதாஸ், செயலர் வி.ஜி.பி., ராஜாதாஸ் மற்றும் உலக தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us