தமிழறிஞர்கள் 12 பேருக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு
தமிழறிஞர்கள் 12 பேருக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு
UPDATED : மார் 10, 2024 12:00 AM
ADDED : மார் 10, 2024 08:50 AM
சென்னை:
கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தமிழறிஞர்கள் 12 பேருக்கு, குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.தமிழக எழுத்தாளர்களில், முக்கிய விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்க, தமிழக அரசு சார்பில் வீடு வழங்கும், கனவு இல்லம் திட்டத்தை, 2021ல் முதல்வர் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், தர்மராஜ், ராமலிங்கம், கோதண்டராமன், வெங்கடேசன், மருதநாயகம், கலைக்கோவன், ராமகிருஷ்ணன், ஜோ.டி.குருஸ், கல்யாணசுந்தரம் ஆகிய, 10 தமிழறிஞர்களுக்கு, வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு அரசாணைகளை நேற்று முதல்வர் வழங்கினார்.மேலும், ராஜேந்திரன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோருக்கு, குடியிருப்புக்கான நிர்வாக அனுமதி ஆணையையும், மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு, 2022ம் ஆண்டுக்கான &'கலைஞர் எழுதுகோல்&' விருதையும், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.விருதுடன், 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் சுப்பிரமணியன், செய்தித்துறை இயக்குனர் வைத்தி நாதன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அவ்வை அருள் ஆகியோர் பங்கேற்றனர்.