பெண் குழந்தைகள் பாதுகாப்பில் ராமநாதபுரத்திற்கு தங்கப்பதக்கம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் ராமநாதபுரத்திற்கு தங்கப்பதக்கம்
UPDATED : மார் 11, 2024 12:00 AM
ADDED : மார் 11, 2024 09:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:
தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாலின சதவீதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயல்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலினவிகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயல்பட்ட மூன்று மாவட்டங்களை தேர்வு செய்து பதக்கம் வழங்கப்படுகிறது. 2023-24 ஆண்டில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பேணி பாதுகாப்பது, கருத்தரிப்பு, மகப்பேறுக்கு முந்தையபரிசோதனைகளில் சிறப்பாக செயல்பட்டமாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடம் பெற்றுள்ளது.காஞ்சிபுரம் இரண்டாமிடம், ஈரோடு மூன்றாமிடம் பெற்றுள்ளன. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில்நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் தங்கப்பதக்கம்,சான்றிதழை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் வழங்கி பாராட்டினார்.