UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 12, 2024 09:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்திற்கு, காலநிலை முன் முயற்சிகளுக்காக, ஷிவ் நாடார் பல்கலை, 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.இதற்கான காசோலையை, பல்கலை வேந்தர் சீனிவாசன், தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹுவிடம் வழங்கினார். ஷிவ் நாடார் பல்கலையின் பங்களிப்பு, மாநிலத்தின் பசுமை பரப்பை மேம்படுத்துதல், மாநிலம் முழுதும் நீல பசுமை மையங்களை நிறுவுதல், சமூக வளங்களை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்கு, உறுதுணையாக இருக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.