sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2025ல் சமுத்ராயன் திட்டம்: கிரண் ரிஜிஜூ உறுதி

2025ல் சமுத்ராயன் திட்டம்: கிரண் ரிஜிஜூ உறுதி

2025ல் சமுத்ராயன் திட்டம்: கிரண் ரிஜிஜூ உறுதி


UPDATED : மார் 12, 2024 12:00 AM

ADDED : மார் 13, 2024 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 12, 2024 12:00 AM ADDED : மார் 13, 2024 09:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
6 ஆயிரம் மீட்டர் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2025ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும் என மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.சமுத்ராயன் திட்டத்திற்கான வாகனங்களை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது. சமுத்ராயான் திட்டமானது, ஆழ் கடலுக்குள் இருக்கும் இதுவரை வெளிஉலகுக்குத் தெரியாததை வெளியே கொண்டு வர, மனிதர்களுடன் கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள நீரில் மூழ்கக்கூடிய வாகனத்தை அனுப்புகிறது. இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி, கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்த இந்த சமுத்ராயான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இது குறுத்து கிரண் ரிஜிஜூ கூறியிருப்பதாவது: 
6 ஆயிரம் மீட்டர் ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ராயன் திட்டம் 2025ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும். கடலுக்கு அடியில் 6 கிமீ ஆழத்தில் உள்ள ஆழ்கடல் பகுதியை தனது விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். சமுத்ராயன் திட்டம் தொடர்பாக வேலைகள் சிறப்பாக நடந்து வருகிறது. சமுத்ராயன் திட்டம் குறித்து பேசும் போது, கடலுக்குள் 6 கிலோமீட்டர் ஆழத்தில் ஆய்வு செய்ய நாங்கள் மேற்கொண்ட பணி பற்றியும் சிறப்பாக பேசப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us