குரூப் 4 தேர்வு: 6,244 இடங்களுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்
குரூப் 4 தேர்வு: 6,244 இடங்களுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்
UPDATED : மார் 12, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 4 -ல் இடம்பெற்றுள்ள :6,244 இடங்களுக்கு நடத்தப்பட உள்ள தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான பேர் விண்ணத்து உள்ளனர்.டி.என்.பி.எஸ்.சி.,சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு மூலம் வி.ஏ.ஓ., 108, இளநிலை உதவியாளர்2,504 உள்பட 6ஆயிரத்து 244 காலி பணயிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது.இத்தேர்வு எழுதுவதற்காக சுமார் 20 லட்சத்து 37 ஆயிரத்து94 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.