UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:50 AM
இதன்வாயிலாக சராசரியாக ஒரு நாளில் ஒரு காப்புரிமை பெற்றுள்ளது பெருமைக்குரிய அம்சம் என்று இயக்குனர் காமகோடி குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்திந்த அவர், அனைவருக்கும் ஐ.ஐ.டி., என்ற குறிக்கோளுடன் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். அதன்படி, ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மையத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களும் தங்களது ஐடியாக்களை மெருகேற்றி, புத்தொழில் துவங்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. ஆகையால், தற்போது இம்மையத்தில் செயல்படும் நிறுவனங்களில் 80 சதவீதம் பிற கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டவை. வரும் காலங்களில் வேலை வாய்ப்பில் மாணவர் பெற்ற ஊதியத்தை முன்னிலைப்படுத்தாமல், மாணவர்களின் புத்தொழில் ஐடியாக்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும், என்றும் வலியுறுத்தியுள்ளார்.

