UPDATED : மார் 14, 2024 12:00 AM
ADDED : மார் 14, 2024 09:27 AM
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி அருகே வீடுகளுக்கே விழிப்புணர்வு ஊர்வலமாக சென்ற அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அங்கேயே மாணவர்கள் சேர்க்கையை துவங்கினர்.வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1 முதல் துவங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து சிங்கம்புணரி அருகே பிரான்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் பள்ளி சேர்க்கை வயது கொண்ட குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் பேசி மாணவர்களுக்கு அட்மிஷன் போட்டனர். புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் கஸ்துாரி ஆகியோர் புத்தகம், நோட்புக் புத்தகப்பை ஆகியவற்றை வீட்டில் வைத்தே வழங்கினர்.ஊர்வலத்தில் ஆசிரியர்கள் பொன்னழகு, சரவணன், முத்துப்பாண்டியன், இந்திரா, நீலாவதி, சூர்யா, கார்த்திகா, அனுப்பிரியா பங்கேற்றனர்.

