உரிமம் இல்லாமல் பைக் ஓட்டக்கூடாது கல்லுாரி மாணவர்களுக்கு அட்வைஸ்
உரிமம் இல்லாமல் பைக் ஓட்டக்கூடாது கல்லுாரி மாணவர்களுக்கு அட்வைஸ்
UPDATED : மார் 14, 2024 12:00 AM
ADDED : மார் 14, 2024 05:50 PM
பொன்னேரி:
பொன்னேரி, திருப்பாலைவனம் ஆகிய காவல் நிலையங்கள், கடந்த மாதம், 1ம் தேதி முதல், ஆவடி கமிஷனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.செங்குன்றத்தை தலைமையிடமாகக் கொண்டு, மீஞ்சூர், சோழவரம், காட்டூர், பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்களுக்கு உதவி கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.நிர்வாக வசதிக்காகவும், தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காகவும் தற்போது பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்களுக்கு என தனி பொறுப்பு உதவி கமிஷனராக சபாபதி நியமிக்கப்பட்டு உள்ளார்.நேற்று, பொன்னேரி பகுதியில், காவலர்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். பொன்னேரி அரசு கல்லுாரி நுழைவாயில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, கல்லுாரிக்கு காதில் கம்மல், கடுக்கண் உள்ளிட்டவைகளை அணிந்து வந்த மாணவர்களை உரிய அறிவுரைகளை வழங்கி, அவற்றைக் கழற்றிவிட்டு செல்லும்படி கூறினார்.ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைலுடன் வந்த மாணவர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கினார். பைக்குகளில் வந்த மாணவர்களை நிறுத்தி ஓட்டுனர் உரிமம் உள்ளதா என சோதனை மேற்கொண்டார்.உரிமம் வைத்திருந்த மாணவர்களை கல்லுாரிக்கு செல்ல அனுமதித்தார். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி வந்த மாணவர்களிடம் இருந்து பைக் சாவிகளை பறிமுதல் செய்து, கல்லுாரி முடிந்து செல்லும்போது, கல்லுாரி முதல்வரிடம் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.பின் மாணவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கக்கூடாது, சாலையில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

