sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திருவொற்றியூரில் செல்பி ஸ்பாட் ரூ.34.67 கோடியில் பணி துவக்கம்

/

திருவொற்றியூரில் செல்பி ஸ்பாட் ரூ.34.67 கோடியில் பணி துவக்கம்

திருவொற்றியூரில் செல்பி ஸ்பாட் ரூ.34.67 கோடியில் பணி துவக்கம்

திருவொற்றியூரில் செல்பி ஸ்பாட் ரூ.34.67 கோடியில் பணி துவக்கம்


UPDATED : மார் 15, 2024 12:00 AM

ADDED : மார் 15, 2024 09:12 AM

Google News

UPDATED : மார் 15, 2024 12:00 AM ADDED : மார் 15, 2024 09:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:
திருவொற்றியூரில், செல்பி ஸ்பாட் வசதியுடன், 34.67 கோடி ரூபாய் செலவில், கடற்கரையை அழகுபடுத்தும் பணிக்கு, அடிக்கல் நாட்டப்பட்டது.திருவொற்றியூர், பாரதியார் நகர் - மஸ்தான் கோவில் சந்திப்பு துவக்கம் வரையிலான கடற்கரையை அழகுபடுத்தும் பணி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியான, 34.67 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை, நேற்று காலை கே.வி.கே.,குப்பம் கடற்கரையில் நடைபெற்றது.இதில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயற்பொறியாளர் விஜயகுமாரி ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர். இப்பணிகள், 1.9 கி.மீ., துாரத்திற்கு, 28,100 சதுர மீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், 347 சதுர மீட்டர் கட்டட பணிகளும் அடங்கும்.திட்டப் பணிகளில் குழந்தைகள் விளையாட்டுத்திடல், கைப்பந்து - கபடி மைதானம், குத்துச்சண்டை வளையம், உடற்பயிற்சிக்கூடம், தியான மண்டபம் அமைக்கப்படுகிறது. மேலும் சிற்பங்கள், கடைகள், சூரிய மின் விளக்குகள், கண்காணிப்பு கேமரா, அனைவருக்குமான ஐந்து ஒப்பனை அறைகள், செல்பி ஸ்பாட், நடைபாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும்.இப்பணிகளை, 6 முதல் 7 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us