பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : மார் 15, 2024 12:00 AM
ADDED : மார் 15, 2024 05:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் என்ற திட்டத்தின் கீழ் மகளிருக்கான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாக்காளர் கல்வி குறித்து நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவரும் ஓட்டு அளிக்க வேண்டும் என்ற கருத்து அடங்கிய பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் சப்கலெக்டர் யஷ்வந்த் மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

