மதுரையில் மார்ச் 23ல் துவங்குது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி!
மதுரையில் மார்ச் 23ல் துவங்குது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி!
UPDATED : மார் 17, 2024 12:00 AM
ADDED : மார் 17, 2024 09:27 AM
மதுரை:
பிளஸ்1, பிளஸ் 2வுக்கு பின் உயர்கல்வியில் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம்எதிர்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மார்ச் 23, 24 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறதுபிளஸ்1, பிளஸ் 2 எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி அனுபவம் வாய்ந்த கல்வி நிபுணர்களால் உயர்கல்வி ஆலோசனை வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.இந்தாண்டு மார்ச் 23, 24 ல் கல்விக் கண்காட்சி, கருத்தரங்குகள் நடக்கின்றன. கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சிகள் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கின்றன.கருத்தரங்குகளில் நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிக்கும் டிப்ஸ் குறித்து கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், கரியர் கவுன்சிலிங் தொடர்பாக கல்வி ஆலோசகர் அஸ்வின், வேலைவாய்ப்பு திறன்கள் என்ற தலைப்பில் சோஹோ மனிதவளத்துறை தலைவர் சார்லஸ் காட்வின் உட்பட 20க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை அள்ளி வழங்கவுள்ளனர்.வேலை வாய்ப்பை எளிதாக்கும் டாப் துறைகள், படிக்கும் போதே மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் என உயர்கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர்.உயர்கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் நேரில் விடைகாண www.kalvimalar.com என்ற இணையதளத்தில் உடன் பதிவு செய்யுங்கள். மேலும் 91505 74441 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் Hi என டைப் செய்தும் பதிவு செய்யலாம். அனுமதி இலவசம்.விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.கல்லுாரிகளில் உள்ள வசதிகள், விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரையிலான நடைமுறைகள், கல்விக்கட்டணம் உள்ளிட்டவை குறித்தும் ஒரே கூரையின் கீழ் அனைத்து ஆலோசனையும் பெறலாம். இதன் மூலம் கல்லுாரிகளை தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.இந்நிகழ்ச்சியில் பவர்டு பை பங்களிப்பாக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா விஷ்வ வித்யாலயம் செயல்படுகின்றன. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, கே.எம்.சி.ஹெச்., அன்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்குகின்றன.பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே பெற்றோருடன் வாருங்கள்; பயனடையுங்கள்.