UPDATED : மார் 18, 2024 12:00 AM
ADDED : மார் 18, 2024 09:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் நிதியுதவியுடன், வேளாண் உதவி பேராசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.கடந்த, 11ம் தேதி துவங்கிய இப்பயிற்சி, இன்று நிறைவு பெறுகிறது. வேளாண் பொறியியல் கல்லுாரி முதல்வர் ரவிராஜ் பயிற்சியை துவக்கிவைத்தார்.இப்பயிற்சியில், புதுப்பிக்கவல்ல ஆற்றல் உற்பத்தியின் அவசியம், சாண எரிவாயு நவீன தொழில்நுட்பம், ஆற்றல் உற்பத்தி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பேராசிரியர் பழனிசெல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.