sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளநிலை படிப்பு க்யூட் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை

இளநிலை படிப்பு க்யூட் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை

இளநிலை படிப்பு க்யூட் தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை


UPDATED : மார் 18, 2024 12:00 AM

ADDED : மார் 18, 2024 09:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2024 12:00 AM ADDED : மார் 18, 2024 09:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வாய்ப்பு
மத்திய பல்கலைகளில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான, க்யூட் எனப்படும் பல்கலை பொது நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தாண்டுக்கான க்யூட் நுழைவுத்தேர்வு மே 15 - 31 வரை நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.லோக்சபா தேர்தல் தேதிகளை பொறுத்து, தேர்வு தேதிகள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் தேதிகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. ஏப்., 19ல் துவங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவுகள் நடக்கின்றன. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.இதை தொடர்ந்து, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று கூறியதாவது:
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மே 15 - 31 வரையிலான தேதிகளில், இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வுகளை, தேசிய தேர்வு முகமை நடத்தும்.ஒரே நாள்
இடையில், மே 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மட்டும் தேர்வும், தேர்தலும் ஒரே நாளில் வருகின்றன. மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான மார்ச் 26க்கு பின், எத்தனை பேர் அந்த நாளில் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர் என்பதை அறிந்த பின், அது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆனால், தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us