sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுங்காடு பணி துவக்கம்

அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுங்காடு பணி துவக்கம்

அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுங்காடு பணி துவக்கம்


UPDATED : மார் 18, 2024 12:00 AM

ADDED : மார் 18, 2024 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2024 12:00 AM ADDED : மார் 18, 2024 09:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கூடலுார்:
லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளியில் பென்னிகுவிக் நினைவாக நன்செய் அறக்கட்டளை சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் பணி துவங்கியது.கேரள எல்லையில் அமைந்துள்ளது லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பள்ளியில் இயற்கை சூழலுடன் உள்ள இப்பள்ளியில் குறுங்காடு அமைப்பதற்கான பணியை உத்தமபாளையம் நன்செய் அறக்கட்டளை சார்பில் துவக்கப்பட்டது. மதுரை இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயலட்சுமி மரக்கன்றை நடவு செய்து துவக்கி வைத்தார். கருங்காலி, கருக்குவச்சி, கருமருது, வேங்கை, செம்மரம், சரங்கொன்றை, நாவல், இலுப்பை, பூவரசு, தோதகத்தி, பவளமல்லி, நீர் மருது உள்ளிட்ட 56 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. மொத்தம் 550 மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டது.மரங்கள் வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளங்கப்பட்டது. பாலிதீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. துணிப்பை வழங்கப்பட்டது. நன்செய் அமைப்பின் நிர்வாகி பசுமை செந்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன், கவுமாரியம்மன் உணவகங்களின் நிர்வாக இயக்குனர் சுதாகர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருமாவளவன், பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் பொன் காட்சிக் கண்ணன், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us