UPDATED : மார் 18, 2024 12:00 AM
ADDED : மார் 18, 2024 12:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கான ஆற்றல் போட்டி வரும் மார்ச் 20ம் தேதி அண்ணா பல்கலை விவேகானந்தர் அரங்கில் நடைபெற உள்ளது.இது குறித்த செய்தி குறிப்பு:
கிண்டி பொறியியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களால் ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக ஆற்றல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் வகுப்புவாரியாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டும் வரும் 20ம் தேதி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.