UPDATED : மார் 19, 2024 12:00 AM
ADDED : மார் 19, 2024 09:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழகத்தில், லோக்சபா தேர்தலில் முதல் முறையாக ஓட்டளிக்கக் கூடிய, வாக்காளர்கள் எண்ணிக்கை, 10.45 லட்சமாக உயர்ந்துள்ளது.தமிழகத்தில், கடந்த ஜன.,22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, முதல் முறை ஓட்டளிக்கக் கூடிய, 18 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை, 9,18, 313 ஆக இருந்தது.அதன்பிறகும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், முதல் முறை ஓட்டளிக்கக்கூடிய, 90,000 பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக, இந்தத் தேர்தலில், முதல் முறை ஓட்டளிக்கக் கூடிய, 18 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை,10,45,470 ஆக உயர்ந்துள்ளது.