sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வரலாறு தேர்வில் டுவிஸ்ட்: உயிரியல் பெஸ்ட்

/

வரலாறு தேர்வில் டுவிஸ்ட்: உயிரியல் பெஸ்ட்

வரலாறு தேர்வில் டுவிஸ்ட்: உயிரியல் பெஸ்ட்

வரலாறு தேர்வில் டுவிஸ்ட்: உயிரியல் பெஸ்ட்


UPDATED : மார் 19, 2024 12:00 AM

ADDED : மார் 19, 2024 09:38 AM

Google News

UPDATED : மார் 19, 2024 12:00 AM ADDED : மார் 19, 2024 09:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
இதுவரை இல்லாத வகையில் வரலாறு தேர்வு வினாத்தாளில் ஐந்து மதிப்பெண் வினா கடினமாக இருந்தது. அதே நேரம், உயிரியல் தேர்வு எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இம்மாதம், 4ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது. நேற்று, உயிரியல், தாவரவியல், வரலாறு, அலுவலக மேலாண்மை உட்பட, ஏழு தேர்வுகள் நேற்று நடந்தது. வழக்கமாக எளிதாக இருக்கும் வரலாறு தேர்வு, நேற்று கடினமாக இருந்தது; தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது.உயிரியல் தேர்வு
தினேஷ்குமார்:
உயிர் தாவரவியல் வினாக்கள் சற்று யோசிக்கும்படி இருந்தது; உயிர்விலங்கியல் பகுதியில் இருந்து வந்த வினாக்கள் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் பெற முடியும். கட்டாய வினா சற்று யோசித்து விடை எழுதும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. வினாத்தாள் எளிமையாக இருந்ததால், நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.ஹர்ஷினி:
பாடங்களுக்கு பின் இருந்தே ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது. இரண்டு, மூன்று மதிப்பெண்ணில் ஏற்கனவே முந்தைய வினாத்தாளில் கேட்ட கேள்விகள் மீண்டும் வந்திருந்தது. கட்டாய வினா யோசிக்க வைத்தது. எதிர்பார்த்த சென்ற படியே வினாத்தாள் அமைந்ததால், 60க்கு மேல் மதிப்பெண் பெற்றிட முடியும்.ஆல்பாஸ் வாய்ப்புண்டுதிருப்பூர் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி, முதுகலை ஆசிரியர் (உயிரியல்) தங்கமனோகரி தேவி கூறுகையில், பலமுறை கேட்கப்பட்ட கேள்வி என்பதால், இரண்டு, மூன்று மதிப்பெண்ணுக்கு முழுமையாக விடையளித்திருக்க முடியும். கட்டாய வினா (வினா எண்: 19) பாடங்களுக்குள் இருந்த இடம் பெற்றாலும், விடையளித்து விடலாம். அனைத்து மாணவ, மாணவியரும் எளிதில் விடையளிக்கும் வகையில் வினாத்தாள் இருந்ததால், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்,&' என்றார்.வரலாறு தேர்வு
ஹரிப்பிரியா:
ஐந்து மதிப்பெண் வினாக்களில் இதுவரை இடம் பெறாத கேள்விகள் இருந்தால், யோசிக்க வேண்டியிருந்தது. ஒரு மதிப்பெண், இரண்டு, மூன்று மதிப்பெண் எளிமையாக இருந்தது. தேர்ச்சி பெற்று விடலாம். 60 க்கும் அதிகமான மதிப்பெண் பெற முடியும். மேப் பகுதி இவ்வாறு வருமென எதிர்பார்க்கவில்லை.சூர்யா:
முந்தைய வினாத்தாள், முக்கிய வினாக்கள் ஐந்து மதிப்பெண்ணில் இடம் பெறுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதுமையான இதுவரை கேட்கப்படாத கேள்விகள் (வினா எண்: 42, 45) வந்திருந்தது. ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் பெற முடியும். ஐந்து மதிப்பெண் தவிர, மற்றவை எளிமையாக இருந்ததால், நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.எதிர்பார்த்த கேள்வி இல்லை
நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முதுகலை ஆசிரியர் (வரலாறு) விமல்பிரகாஷ் கூறுகையில், ஐந்து மதிப்பெண் வினாவில் மாணவர்கள் எதிர்பார்த்த கேள்விகள் இடம் பெறவில்லை. மேப்டைம்லைனில் புதிய கேள்விகள் இருந்தது. முந்தைய வினாத்தாள், முக்கிய வினாக்கள் இடம் பெறவில்லை. ஒரு மதிப்பெண் எளிமையாக இருந்தது. இரண்டு, மூன்று மதிப்பெண்ணில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று விடுவர். நன்றாக படித்து தேர்வெழுதியவர் மட்டுமே சென்டம் பெற முடியும்.149 பேர் ஆப்சென்ட்
உயிரியல் தேர்வெழுத, 6,349 பேர் விண்ணப்பித்தனர்; 55 பேர் தேர்வுக்கு வரவில்லை. தாவரவியல் தேர்வுக்கு, ஐந்து பேர் மட்டும் வரவில்லை; 397 பேர் தேர்வெழுதினர். வரலாறு தேர்வெழுத, 2,322 பேர் தகுதியானவர்கள்; 2,245 பேர் தேர்வெழுதினர்; 77 பேர் தேர்வுக்கு வரவில்லை. வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் தேர்வுக்கு, ஆறு பேர் வரவில்லை; 935 பேர் எழுதினர்.டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த, அனைவரும் (34 பேரும்) தேர்வெழுதினர். அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜி., தேர்வெழுத இருவரும், அலுவலக மேலாண்மை தேர்வெழுத இருவரும் வரவில்லை. நேற்று, மொத்தம் ஏழு தேர்வுகளை, 10 ஆயிரத்து, 214 பேர் எழுத வேண்டும். 149 பேர் தேர்வுக்கு வரவில்லை. 10 ஆயிரத்து, 065 பேர் தேர்வெழுதினர்.






      Dinamalar
      Follow us