UPDATED : மார் 19, 2024 12:00 AM
ADDED : மார் 19, 2024 09:39 AM
குன்னுார்:
அருவங்காடு கிளை நுாலகம், செந்தமிழ் சங்கம் சார்பில் வெடி மருந்து தொழிற்சாலை பள்ளியில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடந்தது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப்-4 தேர்வு ஜூன் மாதம், 9ம் தேதி நடக்கிறது.இந்தத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அருவங்காடு கிளை நுாலகத்தில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அருவங்காடு கிளை நுாலகம் செந்தமிழ் சங்கம் சார்பில், வெடி மருந்து தொழிற்சாலை பள்ளியில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச முதல் மாதிரி தேர்வு நடந்தது. அதில், 12 பேர் பங்கேற்றனர், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் காயத்ரி தேர்வுகளை நடத்தினார் ஏற்பாடுகளை நுாலகர் ஜெயஸ்ரீ செய்திருந்தார். இன்று, (19ம் தேதி) இரண்டாம் கட்ட மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது.