UPDATED : மார் 20, 2024 12:00 AM
ADDED : மார் 20, 2024 09:34 AM
சென்னை:
மத்திய தொல்லியல் துறை சார்பில், தொல்லியல் துறையினருக்கு கடல் அகழாய்வு குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இது குறித்து, மத்திய தொல்லியல் துறையின் கூடுதல் பொது இயக்குனர் அலோக் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கை
:மத்திய தொல்லியல் துறை சார்பில், வரும் மே மாதம் மூன்று கட்ட கடல் அகழாய்வு பயிற்சி வழங்கப்படும். கடல் அகழாய்வு துறையை வலுப்படுத்தும் வகையில், பயிற்சி பெற்ற தொல்லியல் அறிஞர்களை உருவாக்க, இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. நீச்சல் தெரிந்த, கடல் அகழாய்வில் ஆர்வமுள்ள தொல்லியலாளர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம்.இதற்கான விண்ணப்பத்தில், சுய விபரத்துடன் நீச்சல் தகுதிகளையும் குறிப்பிட்டு, uaw2021.asi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வரும் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.