லோக்சபா தேர்தலையொட்டி யு.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒத்திவைப்பு
லோக்சபா தேர்தலையொட்டி யு.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒத்திவைப்பு
UPDATED : மார் 20, 2024 12:00 AM
ADDED : மார் 21, 2024 09:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
லோக்சபா தேர்தலையொட்டி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பாராளுமன்ற லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இது தொடர்பாக அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது. இந்நிலையில் இந்தாண்டின் மத்திய குடிமை பணிகள் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி.,யின் சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுகளை வரும் மே 26ம் தேதி நாடு முழுதும் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது.தற்போது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் முதன்மை தேர்வுகளை ஜூன் 16-ம் தேதி நடத்திட திட்டமிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் வெப்சைட்டிலும் பதிவேற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.