UPDATED : மார் 21, 2024 12:00 AM
ADDED : மார் 21, 2024 09:39 AM
கோவை:
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கோவை மண்டலம் சார்பில், புதிய கிளை துவக்க விழா நடந்தது.கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள், 23 நடுநிலைப்பள்ளிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், இப்பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கோவை மாநகராட்சி புதிய கிளையை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தொடங்கியுள்ளது.மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கிளையை துவக்கி சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து, தொடக்க கல்வித் துறையின்கீழ் இருந்த பள்ளிகள் மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஆசிரியர்களிடையே தங்களது பணி மூப்பு, பதவி உயர்வு குறித்த சந்தேகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.பின்னர், உயர் கல்வி அதிகாரிகளுடன் இதுகுறித்து கலந்தாலோசிப்பது மற்றும் விரைவில் கலந்தாய்வு நடத்தி விரும்பும் பள்ளிகளுக்கு, ஆசிரியர்களை இடமாறுதல் செய்யவும், பள்ளிக் கல்வித் துறைக்கு இது குறித்து வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

