UPDATED : மார் 21, 2024 12:00 AM
ADDED : மார் 21, 2024 09:51 AM
மதுரை:
தேசிய காந்தி நினைவு நிதியின் 75 வது ஆண்டை முன்னிட்டு காந்திய இலக்கிய சங்கம் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் காந்திய இலக்கிய புத்தக கண்காட்சி தொடங்கியது.ஆராய்ச்சி மைய முதல்வர் தேவதாஸ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இயற்கை வாழ்வியல் நிபுணர் தேவதாஸ் காந்தி பெற்றார். காந்தி நினைவு செயலாளர் நந்தாராவ், காப்பாட்சியர் நடராஜன், நிர்வாகி நாகசுந்தரம் பங்கேற்றனர்.கண்காட்சியில் காந்திய இலக்கியங்கள், வாழ்க்கை வரலாற்று நுால்கள், இயற்கை மருத்துவம், யோகாசனம் பாரம்பரிய சமையல், சிறுவர்களுக்கான இலக்கியங்கள், நவீன தமிழ் இலக்கியங்கள் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. சிறப்பு தள்ளுபடி உண்டு. மார்ச் 30 வரை காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.