sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி பேருந்து விபத்து 11 மாணவர்கள் காயம்

பள்ளி பேருந்து விபத்து 11 மாணவர்கள் காயம்

பள்ளி பேருந்து விபத்து 11 மாணவர்கள் காயம்


UPDATED : மார் 22, 2024 12:00 AM

ADDED : மார் 22, 2024 10:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2024 12:00 AM ADDED : மார் 22, 2024 10:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குன்றத்துார்:
குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 30 பேர், பூந்தண்டலத்தில் உள்ள தனியார் பள்ளி மையத்தில் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு நாட்களில் திருமுடிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களை தனியார் பள்ளி பேருந்தில் அழைத்து செல்வது வழக்கம். நேற்று தேர்வு எழுதிய மாணவர்களுடன், பூந்தண்டலம் - பழந்தண்டலம் சாலையில், தனியார் பள்ளி பேருந்து சென்றது.அப்போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அரசு பள்ளி மாணவர்கள் 11 பேர் காயமடைந்தனர். உடனடியாக மின்சார இணைப்பு துண்டிப்பானதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.அவ்வழியாக சென்றவர்கள், மாணவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று மாணவர்கள் வீடு திரும்பினர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us