UPDATED : மார் 22, 2024 12:00 AM
ADDED : மார் 22, 2024 06:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:
மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஆண்டு ஜூனில் பணியில் சேர்ந்த, 486 ஆண் போலீசாருக்கு வழங்கிய, 7 மாத பயிற்சி டிசம்பரில் நிறைவடைந்தது. ஜன., 5ல் பள்ளியில் பயிற்சி முடித்த காவலர்களின் நிறைவு அணிவகுப்பு விழா நடந்தது. பின் அவர்கள், போலீஸ் துறையில் ஒதுக்கீடு செய்த பணிக்கு சென்றனர். வரும் மாதங்களில் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு மேட்டூர் காவலர் பள்ளியில் பயிற்சி தொடங்க உள்ளது. நேற்று அப்பள்ளி முதல்வராக ஏ.டி.எஸ்.பி., சண்முகம் பொறுப்பேற்றார். அவருக்கு பயிற்சி பள்ளி அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.