sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு அபராதம்

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு அபராதம்

எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு அபராதம்


UPDATED : மார் 23, 2024 12:00 AM

ADDED : மார் 23, 2024 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2024 12:00 AM ADDED : மார் 23, 2024 10:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு, கோவை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி அபராதம் விதித்து உத்தரவிட்டார்.கோவை, வடமதுரையை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மகன் கவுதம், செல்வபுரம், தெலுங்குபாளையம் பிரிவிலுள்ள தனியார் பார்மசி கல்லுாரியில் படித்து வந்தார். கவுதமை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுத்ததால், கல்லுாரி மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மீது, கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில், புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.விசாரணைக்கு ஆஜராகுமாறு, மருத்துவ பல்கலைக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகவில்லை. புகார் மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, பல்கலை நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.இதனால், மருத்துவ பல்கலைக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நாராயணன் உத்தரவிட்டார். அபராத தொகையை, இரண்டு வாரத்திற்குள் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us