UPDATED : மார் 24, 2024 12:00 AM
ADDED : மார் 24, 2024 09:23 AM
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான முடநீக்கியல் சிகிச்சை இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று துவங்கியது.இந்திய முடநீக்கியல் மருத்துவர் சங்கத்தின் வழிகாட்டுதல்படி, இரு நாள் பயிற்சி பட்டறை நேற்று துவங்கியது. இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட முடநீக்கியல் முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.முடநீக்கியல் சிகிச்சையில் தற்போதுள்ள நவீன சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சீனியர் முடநீக்கியல் டாக்டர்கள் பங்கேற்று பயிற்சி அளித்தனர். பயிற்சி பட்டறைக்கு அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கினார்.முடநீக்கியல் துறை தலைவர் தர்மவீரகுமார்துபே, முடநீக்கியல் நிபுணர் சாந்தமூர்த்தி பயிற்சி பட்டறை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.