sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிக கட்டுப்பாடுகள் அவசியம் ரிசர்வ் வங்கி துணை கவர்னர்

அதிக கட்டுப்பாடுகள் அவசியம் ரிசர்வ் வங்கி துணை கவர்னர்

அதிக கட்டுப்பாடுகள் அவசியம் ரிசர்வ் வங்கி துணை கவர்னர்


UPDATED : மார் 24, 2024 12:00 AM

ADDED : மார் 24, 2024 12:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2024 12:00 AM ADDED : மார் 24, 2024 12:01 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
டிஜிட்டல்மயமாக்கல் காரணமாக எழும் அபாயங்களிலிருந்து வாடிக்கையாளர்களை காக்க, வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகள் அவசியம் என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ளார். நிதிதொழில்நுட்ப நிறுவனங்களின் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மேலும் தெரிவித்ததாவது:
பின்டெக் நிறுவனங்கள் பல்வேறு நன்மைகளை வழங்கி வந்தாலும், அதில் தவறான பயன்பாடு மற்றும் மோசடியின் அபாயம் அதிகமாக இருக்கிறது. அவை, நுகர்வோரை நிதி பாதிப்புகளுக்கு ஆளாக்கக் கூடும்.இந்நிறுவனங்கள் போதுமான வெளிப்படைத்தன்மை இன்றி செயல்பட்டு வரும் காரணத்தினால், பிரச்னைகள் எழும்பட்சத்தில், அவற்றை தீர்க்க அல்லது இழப்பீடு பெற வாடிக்கையாளர்கள் சிரமப்பட வாய்ப்புள்ளது. வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புகள், மேம்படுத்தப்பட்ட இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்த நுகர்வோர் விழிப்புணர்வு முயற்சிகள் வாயிலாக இந்த அபாயங்களை தீர்க்க வேண்டும்.மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி பரிமாற்றங்களுக்கு, பல முனை அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகள் இருக்கும் போதிலும், வாடிக்கையாளர் அலட்சியம், சைபர் தாக்குதல் காரணமாக, முக்கிய தகவல்கள் திருடு போவது நடந்து கொண்டே தான் இருக்கின்றன.இவற்றிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us