மத்திய அரசு அமைப்பில் ஒப்பந்த அடிப்படைப் பணி வாய்ப்பு
மத்திய அரசு அமைப்பில் ஒப்பந்த அடிப்படைப் பணி வாய்ப்பு
UPDATED : நவ 23, 2010 12:00 AM
ADDED : நவ 23, 2010 11:37 AM
குழந்தைகளின் ஆக்கபூர்வ செயல்களையும், திறனையும் மேம்படுத்தும் விதத்தில் இயங்கி வருவது பால் பவன் என்ற அமைப்பாகும். வயது, திறமை மற்றும் செயலாக்கத்தைப் பொறுத்து குழந்தைகளை ஒரு பொதுவான அமைப்பின் மூலமாக பல்வேறு துறைகளில் மேம்படுத்தும் முயற்சிகளின் இந்த அமைப்பு இயங்கி வருகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் மற்றும் அலுப்பிலிருந்து விடுவிக்கும் தடையற்ற சுற்றுச் சூழலை ஏற்படுத்த இந்த பால் பவன் அமைப்பு முயற்சிக்கிறது. இந்த அமைப்பில் ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கன்சல்டன்ட் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப்பதவிகள் புது டில்லியை மையமாகக் கொண்டவை.
என்ன தகுதிகள் ? : பால் பவன் அமைப்பின் ஒப்பந்த அடிப்படையிலான கன்சல்டன்ட் பதவிக்கு, பின் வரும் தகுதிகள் ஏதாவது ஒன்றினைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலை நிகழ்ச்சிகள் நடத்தும் துறையில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்களுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டிங், தியேட்டர் பெர்பார்மென்ஸ், செட் அமைத்தல், மேக்கப் போடுதல், ஆடை வடிவமைத்தல், லைட்டிங் ஆகியவற்றில் அனுபவத் திறனும், 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பயிற்றுவிக்கும் திறனும் தேவைப்படும்.
உயிரியல் தொடர்புடைய ஏதாவது ஒரு பிரிவில் பி.எஸ்.சி., பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக படித்திருந்து சுற்றுச் சூழல் தொடர்புடைய அம்சங்களை 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கும் திறனும், சுற்றுச் சூழல் துறையில் அனுபவபூர்வ அறிவும் பெற்றவர்கள்.
சீனியர் செகண்டரி அளவிலான படிப்பை முடித்துவிட்டு பெயிண்டிங், ஆர்ட் அண்டு கிராப்ட் பிரிவில் டிப்ளமோ படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்தவர்கள். பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்து விட்டு குரலிசை அல்லது வாத்திய இசையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் அல்லது சீனியர் செகண்டரி அளவிலான படிப்புக்குப் பின் தொடர்புடைய துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப்படிப்பை முடித்தவர்கள்.
விண்ணப்பிப்பது எப்படி? : மேலே சொன்ன தகுதி உடையவர்கள் பயோடேட்டா மற்றும் சம்பந்தப்பட்ட சான்றிதழ் நகல்களுடன் பின் வரும் முகவரிக்கு 25.11.2010க்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
National Bal Bavan,
Kotla Road,
New Delhi.
இணைய தள முகவரி: "http://www.nationalbalbhavan.nic.in/writereaddata/mainlinkFile/File1227.pdf "
