பாரதியார் பல்கலை தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை
பாரதியார் பல்கலை தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை
UPDATED : நவ 24, 2010 12:00 AM
ADDED : நவ 24, 2010 03:29 PM
திருநெல்வேலி: பாரதியார் பல்கலை., தொலைதூர கல்வி நெல்லை கல்வி மையத்தில் வரும் 30ம் தேதி அட்மிஷனுக்கு கடைசி தேதியாகும்.
பாரதியார் பல்கலை., தொலை தூர கல்வியில் எம்.எஸ்சி (ஐ.டி), சாப்ட்வேர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ சிஸ்டம்ஸ் படித்தவர்கள் எம்.சி.ஏ ஒரு ஆண்டில் சேரலாம். பிளஸ் 2 அல்லது பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்தவர்கள் நேரடியாக 5 ஆண்டு கால எம்.பி.ஏ படிப்பில் சேரலாம். கடந்த கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட எம்.எஸ்சி தாவரவியல், விலங்கியல் ஆகிய பட்ட மேற்படிப்புகளுக்கு அட்மிஷன் நடந்து வருகிறது. அட்மிஷன் மற்றும் செய்முறை தேர்வுகள் நெல்லையிலேயே நடத்தப்படுகிறது.
டிப்ளமோ இன் ஐ.டி, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி முடித்தவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பி.சி.ஏ. பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்சில் சேரலாம். பட்டப் படிப்பு முடித்தவர்கள் எம்.எஸ்.டபிள்யூ (சோஷியல் வொர்க்), எம்.எஸ்சி இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பயோ-இன்பர்மேடிக்ஸ், கணிதம், சுற்றுப்புற சூழல் அறிவியல், அப்ளைடு சைக்காலஜி. இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.காம், எம்.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எம்.ஏ ஆங்கிலம் ஆகிய படிப்புகளில் சேரலாம்.
பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்தவர்கள் பி.எஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன், பி.எஸ்.டபிள்யூ. பி.ஏ ஆங்கிலம், பி.எஸ்சி இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.பி.எம், பி.காம், பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பி.ஏ தமிழ், பி.லிட், பி.எஸ்.டபிள்யூ, எம்.பிஏ (5 ஆண்டுகள்) ஆகிய பட்டப் படிப்புகளில் நேரடியாக சேரலாம்.
மேலும் டிப்ளமோ இன் கம்ப்யூட்டரைசடு அக்கவுன்டிங், டிப்ளமோ இன் கேட்டரிங் சயின்ஸ் அன்ட் ஓட்டல் மானேஜ்மென்ட் ஆகிய டிப்ளமோ கோர்ஸ்களில் சேரலாம். பத்திரிக்கை, ரேடியோ, டிவி பணியாளர்கள், அனைத்து ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், போலீஸ் துறை பணியாளர்கள் அனைவருக்கும் கல்வி கட்டணத்தில் 25 சதவீத சலுகையும், பெண்களுக்கு 10 சதவீத சலுகையும் வழங்கப்படும்.
ஊனமுற்றவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது. ஒரே நேரத்தில் 2 பட்டங்கள் பெறலாம். கல்லூரியில் பட்டப் படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்து கொண்டிருப்பவர்கள் பாரதியார் பல்கலை.,யில் சேர்ந்து 2 பட்டங்கள் பெறலாம். முதலாம் ஆண்டு அல்லது 2ம் ஆண்டில் கல்லூரி படிப்பையோ அல்லது தொலை தூர கல்வியில் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் பாரதியார் பல்கலை.,யில் சேர்ந்து அடுத்த ஆண்டிற்கான படிப்பை தொடரலாம்.
மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அட்மிஷன் மற்றும் மேலும் விபரங்களுக்கு நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டான்ட் எதிர்புறம் உள்ள பாரதியார் பல்கலை., நெல்லை கல்வி மையத்தை (0462 - 2331555, 97913 54267) அணுகலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.
