தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயற்கைக்கோள் கல்வி - ஓர் அறிமுகம்!

செயற்கைக்கோள் கல்வி - ஓர் அறிமுகம்!

செயற்கைக்கோள் கல்வி - ஓர் அறிமுகம்!


UPDATED : நவ 26, 2010 12:00 AM

ADDED : நவ 26, 2010 04:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2010 12:00 AM ADDED : நவ 26, 2010 04:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு ஆசிரியர் ஓரிடத்திலிருக்கும் ஸ்டூடியோ மூலம் ஒலி-ஒளி முறையில் பாடம் நடத்த, அதை நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள வகுப்பறைகளில் இருந்து மாணவர்கள் கவனிக்க முடியும், கலந்துரையாடவும் முடியும். ஆசிரியர்-மாணவர் கலந்துரையாடலானது, ஆடியோ மூலமும், வீடியோ மூலமும், ஆன்லைன் உரையாடல் மூலமும் நடைபெறுகிறது.


இந்த EDUSAT திட்டமானது, நமது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவினுடையது(ISRO). இத்திட்டம் 2005 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இதற்காக இன்டர்நெட் புரோடகால் (ஐ.பி) அடிப்படையிலான நெட்வொர்க் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்/முக்கிய தேசிய கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கு-பான்ட் மற்றும் சி-பான்ட் மின்னணு சாதனங்கள், இருவழி ஆடியோ-வீடியோ தொடர்பின் மூலம் நாடுமுழுவதையும் இணைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளன.


இந்த திட்டத்தின்கீழ், செயற்கைக்கோள் கலந்துரையாடல் இலக்குகள்(Satellite Interactive Terminals & SIT) மற்றும் பெறுவதற்காக மட்டுமுள்ள இலக்குகள்(Receive Only Terminals & ROT) என்ற இரண்டு வகை இலக்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ROT அமைப்பானது, தொடக்கநிலை மற்றும் உயர்நிலை கல்வி வழங்கவும், SIT அமைப்பானது, உயர் மற்றும் தொழில்முறை கல்வி வழங்கவும் பயன்படுத்தப்படுகின்றன.


சிறந்த பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள், ஸ்டூடியோவிலிருந்து, பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன. SIT அமைப்பை பயன்படுத்துவதன் மூலமாக ஒரு மாணவர், நன்கு பயிற்சிபெற்ற ஆசிரியருடன் நேரடியாக கலந்துரையாட முடியும். இத்தகைய இலக்குகளில் அதிகமானவை கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us