UPDATED : நவ 30, 2010 12:00 AM
ADDED : நவ 30, 2010 03:39 PM
சி.பி.எஸ்.இ., மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு (ஏ.இ.பி.எம்.பி.டி., 2011) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, தேசிய அளவில் (ஆந்திரா, காஷ்மீர் தவிர) உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
இரு கட்டங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. முதல் தேர்வு 2011, ஏப்., 3ம் தேதி நடக்கிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டுமே 2011 மே 15ல் நடைபெறும் அடுத்த கட்ட நுழைவுத்தேர்வு எழுத முடியும். தேர்வு முறை முதல் தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படும், இரண்டாவது தேர்வில் 120 வினாக்கள் இடம்பெறுகிறது. இரண்டு வினாத்தாள்களிலும்,கேள்விகள் அப்ஜக்டிவ் முறையில் இருக்கும்.
தேர்வு மையங்கள் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் உள்ளன.
கல்வித்தகுதிகள் பிளஸ் 2 படிப்பில் (இயற்பியல்/வேதியியல்/உயிரியல் பாடங்களில்) குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2011, மார்ச்சில் தேர்வெழுத உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது
ஆப்லைன் மற்றும் ஆன்லைன் என இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். நாட்டில் உள்ள முக்கிய கனரா வங்கி கிளைகளில் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். www.aipmt.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கட்டணம்: ஆப்லைன் 800 ரூபாய், ஆன்லைன் 700 ரூபாய். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 2011, மார்ச் 15. விபரங்களுக்கு: www.aipmt.nic.in
