தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தூத்துக்குடி கப்பல் துறைமுகத்தில் பி.ஜி., அசிஸ்டெண்ட் பணி வாய்ப்பு

தூத்துக்குடி கப்பல் துறைமுகத்தில் பி.ஜி., அசிஸ்டெண்ட் பணி வாய்ப்பு

தூத்துக்குடி கப்பல் துறைமுகத்தில் பி.ஜி., அசிஸ்டெண்ட் பணி வாய்ப்பு


UPDATED : நவ 30, 2010 12:00 AM

ADDED : நவ 30, 2010 04:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2010 12:00 AM ADDED : நவ 30, 2010 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ் நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள கப்பல் துறைமுகம் இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களுள் ஒன்று. இது ஐ.எஸ்.ஓ., 9001200, ஐ.எஸ்.ஓ.,14001:2004 போன்ற தரச் சான்றுகளைப் பெற்ற புகழ் பெற்ற துறைமுகமாகும். ஒரு நாளின் 24 மணி நேரமும் இங்கு பணி நடப்பதோடு கட்டுக் கோப்பான ஊழியர்கள், மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படும் அதிகாரிகள் போன்றவற்றிற்காக அறியப்படுகிறது. இங்கு முது நிலைப் பட்டதாரி உதவியாளர்களைப் பணியில் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கல்வித் தகுதி
தூத்துக்குடி துறைமுகத்தின் முது நிலைப் பட்டதாரி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பொருளாதாரத்திற்கு இணையான தரம்பெற்ற படிப்பில் முது நிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் பி.டி., அல்லது பி.எட்., படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.


தேர்ச்சி முறை
தூத்துக்குடி துறைமுகத்தின் முது நிலைப் பட்டதாரி உதவியாளர் பதவிக்கு நேர்காணல் அடிப்படையிலேயே தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களின் தகுதி அடிப்படையில் நேர்காணலுக்கான அழைப்புகள் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி ?
தூத்துக்குடி துறைமுகத்தின் முது நிலைப் பட்டதாரி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை டி.டி.,யாக  "Secretary/Tuticorin Port Trust Educational Agency" என்ற பெயரில் தூத்துக்குடியில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும்.


எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோருக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. விண்ணப்பங்களைப் பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே அனுப்பவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 06.12.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


முகவரி
The Secretary,
Tuticorin Port Educational Agency,
Port Administrative Buildings,
Tuticorin - 628004.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us