UPDATED : டிச 01, 2010 12:00 AM
ADDED : டிச 01, 2010 02:24 PM
பொறியாளர்களின் துணையோடு வடிவமைப்பைப்பெற்று கட்டடங்களை கட்டுவது சாதாரண நடைமுறை வழக்கம். ஆனால் தற்போதைய நவீன காலக்கட்டத்தில் பூகம்பம், உலக வெப்பமயமாதல் போன்ற இயற்கை அபாயங்களை கருத்தில் கொண்டு கட்டடங்களை வடிவமைத்து நிர்மாணிப்பதே பசுமை கட்டுமானம் (கிரீன் ஆர்க்கிடெக்சர்) என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு இயற்கைக்கு ஏற்ப கட்டடங்களை நிர்மாணித்து தருபவர்களை ஆங்கிலத்தில் "கிரீன் ஆர்க்கிடெக்ட்' என்று அழைக்கிறார்கள். பெரிய தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள் கட்டடங்களை கட்டும் போது இத்தகைய நடைமுறைகளை பின்பற்ற துவங்கியுள்ளன.
இதற்காக கிரீன் ஆர்க்கிடெக்டுகளின் உதவி நாடப்படுகிறது. கட்டுமான நிறுவனங்களும் தற்போது இதுகுறித்த விழிப்புணர்வைப் பெற்றுள்ளன. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய பசுமை கட்டடங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த பசுமை கட்டடங்களை கட்டுவதன் மூலம் பூமி வெப்பமயமாவதை 30 சதவீதம் வரை குறைக்க முடியும் என இத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்வித்தகுதி
பிளஸ்2 வில் அறிவியல் பாடங்களை எடுத்து படித்திருப்பது அடிப்படை கல்வித்தகுதியாக கருதப்படுகிறது. அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ), நேஷனல் ஆப்டிடியூடு டெஸ்ட் இன் ஆர்க்கிடெக்சர்(நேட்டா) போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டியிருக்கும். இந்தியாவிலேயே இத்தகைய படிப்புகளை கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஏற்கனவே டிப்ளமோ மற்றும் பி.இ., சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களும் இந்த துறையில் நுழைய முடியும்.
வேலைவாய்பபு
பெரும்பாலான உலக நாடுகள் தற்போது இத்தகைய பசுமை கட்டடங்களை கட்டுவதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளதால் உலகளவில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்தியாவிலேயே பெரிய கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. இனி வரும் காலங்களில் இவர்களுக்கு நல்ல மவுசு இருக்கும் என இத்துறை வல்லுனர்கள் உறுதிபட கூறுகின்றனர்.
கல்வி நிறுவனங்கள்
ஐ.ஐ.டி., கராக்பூர்
ஜாமியா மிலியா இஸ்லாமியா, டில்லி
ஸ்கூல் ஆப் பிளானிங் அன்டு ஆர்க்கிடெக்சர், டில்லி
சர் ஜெ.ஜெ.காலேஜ் ஆப் ஆர்க்கிடெக்சர், டில்லி
சென்டர் பார் என்விரான்மென்டல் பிளானிங் அன்டு டெக்னாலஜி, ஆமதாபாத்.
