தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேம்பஸ் இன்டர்வியூவில் சாதித்த எஸ்.ஆர்.எம்., பல்கலை

கேம்பஸ் இன்டர்வியூவில் சாதித்த எஸ்.ஆர்.எம்., பல்கலை

கேம்பஸ் இன்டர்வியூவில் சாதித்த எஸ்.ஆர்.எம்., பல்கலை


UPDATED : டிச 03, 2010 12:00 AM

ADDED : டிச 03, 2010 03:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2010 12:00 AM ADDED : டிச 03, 2010 03:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எஸ்.ஆர்.எம்.பல்கலையில், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவில், ஒரே கட்டத்தில் 1,091 பேரை தேர்வு செய்துள்ளது.


இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பல்கலை துணைவேந்தர் சத்தியநாராயணன் பேசியதாவது: எங்கள் பல்கலையில் நவ., 26 முதல் 28 வரை நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் மட்டும் 1,091 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் பி.டெக்., பிரிவில் 905, (கம்ப்யூட்டர் சயின்ஸ்- 184, எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்- 146, ஐ.டி., -98, எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 86, மெக்கானிக்கல்- 68, பயோ டெக்- 53 மற்றும் இதர பிரிவுகளில் 270 பேரும்) தேர்வாகியுள்ளனர். எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., பிரிவில் 186 பேரும் தேர்வாகியுள்ளனர்.


விப்ரோ நிறுவனமும் அதிகபட்சமாக 406 பேரை தேர்வு செய்துள்ளது. மொத்தம் 2,400 பேர் கலந்து கொண்டதில் 1,538 பேர் தேர்வாகியுள்ளனர். இந்த ஆண்டு 175 நிறுவனங்கள் வர இருக்கின்றன. எங்கள் பல்கலையில் சட்டப் படிப்பு துவங்க முன்னோட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்நிகழ்ச்சியில் பல்கலை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் முத்துச் செல்வன், பல்கலை இணை வேந்தர் பொன்னவைக்கோ மற்றும் பதிவாளர் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us