தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி நிறுவன விளம்பரங்களுக்கு ஏ.எஸ்.சி.ஐ. கட்டுப்பாடு

கல்வி நிறுவன விளம்பரங்களுக்கு ஏ.எஸ்.சி.ஐ. கட்டுப்பாடு

கல்வி நிறுவன விளம்பரங்களுக்கு ஏ.எஸ்.சி.ஐ. கட்டுப்பாடு


UPDATED : டிச 04, 2010 12:00 AM

ADDED : டிச 04, 2010 06:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2010 12:00 AM ADDED : டிச 04, 2010 06:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கல்வி நிறுவனங்களின் போலி விளம்பரங்கள் சம்பந்தமாக வந்த 6 புகார்களையடுத்து, இந்திய விளம்பர தரநிர்ணய கவுன்சில்(.எஸ்.சி..), கல்வி நிறுவனங்கள் விளம்பரம் கொடுப்பது சம்பந்தமாக பல வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.


கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 12 போலி விளம்பர புகார்கள் இந்த கவுன்சிலுக்கு வந்தன. அவற்றில் 6 புகார்கள் கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவை. மற்றவை, நுகர்பொருட்கள், பயணம், ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீதானவை.


.எஸ்.சி.. அமைப்பின் நுகர்வோர் புகார்கள் கவுன்சில்(சி.சி.சி.), &'கேரியர் லாஞ்சர் இந்தியா&' என்ற நிறுவனத்தின் 3 விளம்பரங்களுக்கு எதிராக புர்கார்களை பெற்றது.


அதிக வெற்றி விகிதம், தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, மும்பையிலேயே சிறந்த பயிற்சியாளராக இருப்பது உள்ளிட்ட விஷயங்களில் சரியான ஆதாரங்கள் அந்த நிறுவனத்திடம் இல்லாதது போன்றவையே அந்த புகார்கள். எனவே, அந்த விளம்பரம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும் என்று சி.சி.சி. அந்த நிறுவனத்திடம் கூறியுள்ளது என்று .எஸ்.சி.. அறிக்கை தெரிவிக்கிறது.


அதேபோன்று, "டைம் இன்ஸ்டிடியூட்" நிறுவனம், "ஜிமேட்" பயிற்சியில் தான் முதலிடத்தில் இருப்பதாக கொடுத்த விளம்பரத்தை, ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாததால், அந்த விளம்பரத்தை விலக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், அந்த நிறுவனத்தின் வலைதளத்தில், கல்வி சம்பந்தமாக அது பிரிட்டிஷ் துணை உயர் கமிஷனுடன் ஒத்துழைப்பில் இருப்பதாக கொடுக்கப்பட்டுள்ள தகவலையும் நிரூபிக்க முடியாததால், தளத்திலிருந்து எடுத்துவிட வேண்டியதாயிற்று.


இத்தகைய சம்பவங்களால், கல்வி சம்பந்தமான விளம்பரங்களில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை .எஸ்.சி.. வழங்கியுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us