தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் 2 அரசு பள்ளிகளில் அபாகஸ் கல்வி முறை

சென்னையில் 2 அரசு பள்ளிகளில் அபாகஸ் கல்வி முறை

சென்னையில் 2 அரசு பள்ளிகளில் அபாகஸ் கல்வி முறை


UPDATED : டிச 06, 2010 12:00 AM

ADDED : டிச 06, 2010 04:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2010 12:00 AM ADDED : டிச 06, 2010 04:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘அனைத்து சென்னை பள்ளிகளிலும், அபாகஸ் கல்வி முறை செயல்படுத்தப்படும்” என மேயர் சுப்பிரமணியம் கூறினார்.


வடசென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள, சென்னை துவக்கப் பள்ளிகளில் அபாகஸ் முறையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.


சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், இத்திட்டத்தினை துவங்கி வைத்து மேயர் சுப்பிரமணிய பேசும்போது, ‘இரண்டு சென்னை தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புக்கு அபாகஸ் கல்வி முறை துவங்கப்படுகிறது.


பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் தொடக்க நிலைப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. துவக்க நிலை பயிற்சி பெற்ற மூன்று மாதத்திற்கு பிறகு அடுத்தக் கட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அபாகஸ் நிறுவனம் முதல் கட்டமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இந்த பயிற்சிக்காக 30 ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து அனைத்து சென்னை பள்ளிகளிலும் அபாகஸ் முறை செயல்படுத்தப்படும்’ என்றார்.


இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை கமிஷனர் பாலாஜி(கல்வி), துணை மேயர் சத்தியபாமா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us