தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெற்றுப் பாதையும் வெற்றிப் பாதையும்

வெற்றுப் பாதையும் வெற்றிப் பாதையும்

வெற்றுப் பாதையும் வெற்றிப் பாதையும்


UPDATED : டிச 07, 2010 12:00 AM

ADDED : டிச 07, 2010 01:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2010 12:00 AM ADDED : டிச 07, 2010 01:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் 504 (தேசிய அறிவுக்குழு  National Knowledge Commission கணிப்பில், இதைப்போல மூன்றுமடங்கு இன்றைய தேவை!) இவை உள்ளடக்கிய கல்லூரிகள் (2565 பெண்கள் கல்லூரிகள் உட்பட) மொத்தம் 25951 இவற்றில் 1.36 கோடி மாணவர்கள் பயிலுகிறார்கள். இவர்களில் 56.49 லட்சம் பெண்கள் (3ல் 1 பங்கைத் தாண்டிவிட்டோம்!) ஆக,ஆண்டுக்கு சுமாராக 40 லட்சம் பட்டதாரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.



மாணவர்கள் ஒரு நோக்கமோ இலக்கோ இல்லாமல் ஏதோ படித்து எதிலோ பட்டம் பெறுவதைச் செய்கிறார்கள்; அதன்பிறகு அதே போல, கிடைக்கும் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து காலத்தைக் கடத்திவிடுகிறார்கள். அப்படி இன்றி, குறிக்கோளுடன் இயங்கி நினைத்ததை அடைந்து வாழ்வை வென்று காட்டுகிறவர்கள் இருக்கிறார்கள் சிலருக்கு வெற்றுப்பாதையாக இருப்பது இவர்களுக்கு வெற்றிப்பாதையாக மாறுவது எப்படி?



கேள்வியில் உள்ள பதில்: இப்படி ஒரு கேள்விகேட்பதிலேயே (Asking) விடை இருக்கிறது. A-S-k): A-Aptitude, S-Scope, K-Knowledge என்ற மூன்றும் வெற்றிப்பாதையை வகுத்துத் தருபவை.



நாட்டம்: Aptitude என்பது மனநாட்டம், உள்ளக்கிடக்கை எனலாம். இலக்கு எவை என்று உணர்ந்துகொள்வது ராமானுசன், பில்கேட்ஸ் போன்ற சிகரம் தொட்ட மனிதர்கள் தமது மனவேட்டைக்கு மதிப்பளித்துதான் உயர்ந்தார்கள். இன்றுள்ள பணித்துறைகள் ஏராளம். இந்திய ஆட்சிப்பணி, காவல்துறை, சட்டம், வணிகவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, நுண்கலை, சுற்றுலா, உணவும் விருந்தோம்பலும், இதழியல், பல்லூடகம்,... இவை அனைத்திலும் ஆசிரியப்பணி முதலிய பல உண்டு. இவற்றில் எது / எவை உங்களுக்குப் பிடித்தமானவை பொருத்தமானவை என நீங்கள் முடிவெடுத்ததாக வேண்டும்.



இதில் உரிமையோடு பெற்றோர் தலையிடுவது உண்டு. "நான் ஐஅகு சேர முடியாமல் போய்விட்டது; அந்தக்கனவை என் மகன்தான் நனவாக்க வேண்டும்' என்பவர் தந்தை ஆனால் மகனுக்கு டாக்டராகும் கனவு இருந்தால் அதை யார் நிறைவேற்றுவது? ஆகவே, "திணிப்பு' வேண்டாம். அதே நேரத்தில், மகன் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் தவறாக முடிவு எடுத்து விடாமலிருக்க உதவவேண்டிய கடமை பெற்றோருக்கும் நிச்சயமாக உண்டு. முடிவெடுப்பதற்கு, முறைப்படுத்தப்பட்ட சைக்கோமெட்ரிக் டெஸ்ட் முதலியவை பயன்படும் தவிர, இன்டர்நெட், கலந்தாய்வு, தகவல் நூல்கள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுத்தும் "தெரிந்து முடிவெடுக்க' இளைஞர்களுக்கு உதவலாம்.



வாய்ப்பு: இவ்வாறு தமக்குப் பிடித்தமான துறைகளைச் சலித்து எடுத்து இரண்டாவது கட்டமாக அவற்றில் ஒவ்வொன்றுக்குமுள்ள வாய்ப்புகளை (Scope) அலசவேண்டும். அத்துறையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைகிடைக்கும் வாய்ப்பு, ஊதியம், மேல் படிப்பு, பணி உயர்வுக்கு வாய்ப்பு ஆகியவற்றை நுணுகிப்பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும். இந்தச் சலித்தலில் சில துறைகள் கழிந்து விடும்.



அறிவு: மூன்றாவது சல்லடையாக, இப்படித்தேறிய துறைகளில் எவற்றில் தமக்குப் போதிய அறிவு (Marine Engineering) முன்பே உள்ளது, அல்லது இனி வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் வழியும் என்ன என்று பார்க்கவேண்டும். எடுத்துக்காட்டாக, பொறியியல் பாடங்கள் எடுத்திருக்கவேண்டும். பொறியியலுக்குள்ளேயே Marine Engineering  பாடப்பிரிவு பயிலுவதானால், மார்பளவு முதலிய உடல்தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பு அறிவைப்பெற அதை வழங்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை தேட வேண்டும். IIT-Pகளையும் NITகளையும் மறந்துவிடமுடியாது. மருத்துவம் என்று PMPD நுழைவுத்தேர்வு முக்கியமானது.



பொறியியல்: பொறியியல் படிப்பு, தொழில் படிப்புகளில் முக்கிய இடம் வகிப்பது மைய அரசின் பராமரிப்பில் வரும் நாடுதழுவிய கல்வி நிறுவனங்களும் மாநில அளவிலான பிற கல்வி நிறுவனங்களும் பொறியியல் படிப்பை வழங்குகின்றன. ஐ.ஐ.டி., எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களும், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில் நுட்பக் கழகங்களும் முதல்வகையில் அடங்கும்.



தமிழக அரசின் பராமரிப்பில் வரும் பொறியியற்கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இவை தவிர ஒரு தனியார் பல்கலைக்கழகமும் பல நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களும் நாடு தழுவிய அளவில் மாணவர் சேர்க்கை நடத்தி இயங்குகின்றன. 1997 முதல் தமிழ்நாட்டு அரசின் கொள்கைப்படி அதன் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புச் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வுகள் எடுக்கப்பட்டுவிட்டன. மற்றவகைக் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வுகள் உண்டு.



பேரா. ப.வே.நவநீதகிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us