UPDATED : டிச 07, 2010 12:00 AM
ADDED : டிச 07, 2010 04:31 PM
இந்தியாவின் பெருமைமிகு எண்ணெய் நிறுவனமான இந்திய எண்ணெய் கழகத்தில் (ஐ.ஓ.சி.எல்.,) மூன்று பிரிவுகளில் அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு
இந்திய எண்ணெய் கழகத்தின் அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க 31.12.2010 அன்று வயது 26க்குள் இருக்க வேண்டும். முழு விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி
பிரிவு 1: 15 காலியிடங்களைக் கொண்ட இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்க 2 ஆண்டு கால முது நிலை டிப்ளமோ படிப்பு அல்லது மனித வள மேம்பாட்டில் முது நிலைப் பட்டப் படிப்பு அல்லது பர்சானல் மேனேஜ்மென்ட் அல்லது சோசியல் ஒர்க்கிற்கு இணையான தகுதி இவற்றில் ஏதாவது ஒன்றினை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது கல்வி நிறுவனத்தின் மூலமாகக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
பிரிவு 2: 10 காலியிடங்களைக் கொண்ட இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்க 2 ஆண்டு கால முது நிலை டிப்ளமோ படிப்பு அல்லது ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன், பொது உறவு அல்லது இதற்கு இணையான ஏதாவது பிரிவில் முது நிலை பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது கல்வி நிறுவனத்தின் மூலமாகக் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
பிரிவு 3: 25 காலியிடங்களைக் கொண்ட இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்க பயர் இன்ஜினியரிங் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்ற பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்தத் துறையில் படிப்புக்குப் பிந்தைய அனுபவம் இருந்தால் முன்னுரிமை உண்டு.
தேர்ச்சி முறை
இந்திய எண்ணெய் கழகத்தின் அதிகாரிப் பதவிக்கு எழுத்துத் தேர்வு, குழு விவாதம், குழு செயல்முறை, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வில் ஜெனரல் ஆப்டிடியூட் மற்றும் துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பிக்கும் முறை இந்திய எண்ணெய் கழகத்தின் அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். இணைய தள முகவரி: www.iocl.com
