UPDATED : டிச 08, 2010 12:00 AM
ADDED : டிச 08, 2010 02:34 PM
மதுரை: மதுரைக் கல்லூரி தத்துவவியல் துறை மற்றும் மறுபக்கம் அமைப்பின் சார்பில், 12 வது குறும்பட திரையீட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடந்தது.குறும்பட தயாரிப்பாளர்கள் ராகுல்ராய், ஷாபா தேவன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். எழுத்தாளர் இமயம் குத்து விளக்கேற்றினார். மறுபக்கம் அமைப்பு நிறுவனர் அமுதன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
வட்டம் (மராத்தி), செங்குருதி (தமிழ்), வெயிட்டிங் ஆஸ்திரேலியா (ஆங்கிலம்) பிளாக் பேட்ஜ் (தென்கொரியா) குறும்படங்கள் திரையிடப்பட்டன. டிச., 11 வரை, பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட 100 குறும்படங்கள், கல்லூரியின் இரண்டு ஹால்களில் திரையிடப்படுகின்றன. டிச., 11, மாலை 5 மணிக்கு, முனியராஜ் குழுவினரின் "அரிச்சந்திர மயான காண்டம்&' நாடகம் நேரடியாக நடத்தப்படுகிறது. ஓவியர்கள் ரபீக் ராஜா, இப்ராஹிம், அரசுவின் ஓவிய கண்காட்சியும் நடக்கிறது.
