தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் வழி பி.எட்., சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு இல்லை

தமிழ் வழி பி.எட்., சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு இல்லை

தமிழ் வழி பி.எட்., சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு இல்லை


UPDATED : டிச 10, 2010 12:00 AM

ADDED : டிச 10, 2010 11:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2010 12:00 AM ADDED : டிச 10, 2010 11:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை தொலைக் கல்வி இயக்ககத்தின் கீழ், தமிழ்வழி பி.எட்., சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு இல்லை.


வரும் கல்வியாண்டு பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இரண்டாண்டு கற்பித்தல் அனுபவத்துடன் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பி.எட்., படிக்கலாம்.


தமிழ், தமிழ் இலக்கியம், ஆங்கிலம், கணிதம், பயன்பாட்டு கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவிஇயற்பியல், உயிர் இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், உயிர் வேதியியல், பயன்பாட்டு அறிவியல், விலங்கியல், தாவரவியல், தாவர உயிரியல், நுண்ணுயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், உயிர்நுட்பவியல், வரலாறு, இந்திய பண்பாடு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடு பிரிவுகளின் இளநிலை பட்டம் பெற்றவர்கள், பொருளாதாரம், வணிகவியல், மனையியல் பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


கல்லூரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்கில் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பம் பெற முகவரி : எண்10, கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை - 625 002 அல்லது 36, மேல வடம்போக்கி தெரு, மதுரை - 625 001. கூடுதல் விவரங்களுக்கு 0452 - 252 1695, 233 9974ல் அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us