UPDATED : டிச 15, 2010 12:00 AM
ADDED : டிச 15, 2010 03:32 PM
அ நிறம் | அளவு
மருத்துவம் சம்பந்தமான உயர்கல்வியை மேற்கொள்வதற்கு அடிப்படை தேவையாக கருதப்படும் படிப்புகளான இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றின் வரிசையில், பயோடெக்னாலஜி படிப்பையும் சேர்த்துக்கொள்ள இந்திய மெடிக்கல் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் பயோடெக்னாலஜி படிப்பை முடித்துள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஏ.ஐ. பி.எம்.டி. தேர்வில் கலந்துகொள்ள முடியும். மருத்துவம் மற்றும் மருந்துகள் தயாரிப்பு துறைகளுக்கு அதிக தொடர்புடைய படிப்பாக பயோடெக்னாலஜி மாறிவருவது குறிப்பிடத்தக்கது.
