UPDATED : டிச 16, 2010 12:00 AM
ADDED : டிச 16, 2010 10:10 AM
அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான யேல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இந்தியாவின் கோழிக்கோடு ஐ.ஐ.எம். மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்கள், கல்வி நிலைய தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சி திட்டங்கள் சம்பந்தமாக புரிந்துணர்வை எட்டியுள்ளன.
இதன்மூலம் துணைவேந்தர், இயக்குனர் மற்றும் டீன் நிலையிலுள்ள கல்வி நிலைய தலைவர்கள் அமெரிக்காவில் பயிற்சி பெறுவார்கள். மேலும் 2011, ஜனவரி முதல், கல்வி நிலைய தலைமைத்துவத்திற்கான இரண்டு புதிய அறிவுத்திறன் மையங்கள், கல்வி நிறுவனங்களில் முதல் 5 வருடத்திற்கு ஏற்படுத்தப்படும்.
உயர்கல்வியில் கூட்டு ஆசிரியர் ஆராய்ச்சி, கல்வி நிலைய நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம் சம்பந்தமான பயிற்சி பட்டறை மற்றும் செமினார்களும் இந்த பயிற்சி திட்டத்தில் அடக்கம். இத்திட்டத்தின் முதல் பயிற்சியானது, 2011 -இல் நியூ ஹேவன், கனக்டிகட். என்ற இடத்தில் தொடங்குகிறது.
