தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாகிஸ்தானில் 2 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி உதவி: பிரிட்டன் முடிவு

பாகிஸ்தானில் 2 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி உதவி: பிரிட்டன் முடிவு

பாகிஸ்தானில் 2 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி உதவி: பிரிட்டன் முடிவு


UPDATED : டிச 16, 2010 12:00 AM

ADDED : டிச 16, 2010 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2010 12:00 AM ADDED : டிச 16, 2010 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

லண்டன்: பாகிஸ்தானில்‌ கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கல்வி கற்க முடியாமல் போன 2 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கற்கும் வசதியினை பிரிட்டன் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த செப்டம்பர் மாத்ம் பெய்த கன்மழையால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன .


மேலும் வெள்ளத்தினால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிக்கட்டடங்கள் சேதமாயின. பாலங்கள், சாலைகள் விவசாய நிலங்கள் என பல கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் பிரிட்டனின் சர்வதேச மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் ஆன்ட்ரு மிட்செல் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில், பிரிட்டன் பாகிஸ்தானின் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஏற்கனவே பார்வையிட்டு மதிப்பிட்டுள்ளது.


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கற்க, முதல்கட்டமாக 1500 பள்ளிகளை சீரமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் வீடிழந்த குடும்பங்களுக்கு 25 ஆயிரம் தற்காலிக குடியிருப்புகள் கட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us