தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை வளர்ப்புக்கு இலவச பயிற்சி வகுப்பு

கால்நடை வளர்ப்புக்கு இலவச பயிற்சி வகுப்பு

கால்நடை வளர்ப்புக்கு இலவச பயிற்சி வகுப்பு


UPDATED : டிச 16, 2010 12:00 AM

ADDED : டிச 16, 2010 03:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2010 12:00 AM ADDED : டிச 16, 2010 03:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி அடுத்த குண்டல்பட்டியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி வகுப்பு வரும் 22 மற்றும் 29ம் தேதிகளில் நடக்கிறது. ஆராய்ச்சி மைய தலைவர் மற்றும் பேராசிரியர் முருகன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.


வரும் 22 மற்றும் 29ம் தேதிகளில் வெள்ளாடு வளர்ப்பு, காடை வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. பயிற்சியில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், கால்நடை வளர்க்க விரும்புவோர் முன்னதாக டெலிஃபோன் எண் 04342 - 292525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us